தமிழ்நாடு

எம்.ஃபில். பட்டப்படிப்பு தொடர்ந்து நடத்தப்படும்: அமைச்சர் பொன்முடி

1st Jul 2021 01:32 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில்., பட்டப்படிப்பு தொடர்ந்து நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

எம்.ஃபில்., பட்டப்படிப்பை சென்னை பல்கலைக்கழகம் ரத்து செய்த நிலையில், அமைச்சர் பொன்முடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை சந்தித்துப் பேசிய பிறகு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குப் பிறகு வெளிப்படைத் தன்மையுடன் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

சென்னை பல்கலையில் எம்.ஃபில்., பட்டப்படிப்பு தொடரும். சென்னை பல்கலைக் கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்.ஃபில்., படிப்பைத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

பல்கலைக்கழகங்களில் நியமனங்களை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும் என்று துணைவேந்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT