மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 85.35 அடியிலிருந்து 84.45 அடியாக சரிந்தது.
புதன்கிழமை காலை வினாடிக்கு 5,130 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து வியாழக்கிழமை காலை 4123 கனஅடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 47.49 டி.எம்.சி ஆக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
ADVERTISEMENT
ஒஹேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கனஅடியாக உள்ளது. மழையளவு: 18.20