தமிழ்நாடு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவர் தின விழா: மாவட்ட ஆட்சியர், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பு

1st Jul 2021 03:17 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்ட மருத்துவர் தினவிழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயிலாடுதுறை எம்.பி. செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் எஸ்.ராஜகுமார், நிவேதா எம்.முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மருத்துவர்களின் சேவையைப் பாராட்டினர். 

மருத்துவத் துறையில் சேவையாற்றி, அத்துறைக்கு பெருமை சேர்த்த டாக்டர் பி.சி.ராயின் நினைவைப் போற்றும் வகையில், அவர் பிறந்த தினமான ஜூலை 1-ஆம் தேதி மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், மயிலாடுதுறை அழகுஜோதி அகாதெமி, பாரதிய ஜெயின் சங்கேதனா மற்றும் சென்ட்ரல் லைன்ஸ் சங்கம் சார்பில் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமை வகித்து, மருத்துவர்களின் சேவையைப் பாராட்டி பேசி, மருத்துவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்.

ADVERTISEMENT

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் சுகுணாவுக்கு நினைவுப் பரிசினை வழங்கிய எம்.பி செ.ராமலிங்கம். உடன், எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதா எம்.முருகன் உள்ளிட்டோர்.

பள்ளித் தாளாளர் சிவக்குமார், பள்ளி முதல்வர் நோயல்மணி, ஜெயின் சங்க நிர்வாகிகள் ராஜ்குமார் ஜெயின், லௌனீஸ், ரோனக், கிஷோர்குமார், லைன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் சிவலிங்கம், அசோக்குமார், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செ.ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ராஜகுமார் (மயிலாடுதுறை) நிவேதா எம்.முருகன் (பூம்புகார்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று மருத்துவர்களின் சேவையை வாழ்த்திப் பேசினர்.

நிகழ்ச்சியில், மருத்துவத்துறை இணை இயக்குநர் ஆர்.மகேந்திரன், தலைமை மருத்துவர் (பொறுப்பு) வீரசோழன் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை பள்ளி துணை முதல்வர் அமுதா மற்றும் ராதிகா, கங்காதேவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் இளையபெருமாள், ஞான.இமயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT