தமிழ்நாடு

ஆத்தூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்

31st Jan 2021 11:45 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு முகாமை ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி துவக்கி வைத்தார்.

ஆத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவர் ராஜா கே.பி.மாதேஸ்வரன், அ.சண்முகசுந்தரம், பாலமுருகன், துப்புரவு அலுவலர் என்.திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், அனைத்து பொது இடங்களிலும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். 5 வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT