தமிழ்நாடு

பெட்ரோல் பங்க்குகளுக்கு நேரக் கட்டுப்பாடு இல்லை: தமிழக அரசு அறிவிப்பு

31st Jan 2021 01:19 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் பிப்.1 முதல் நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஜனவரி 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் பிப். 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு

இதில், பிப்.1 முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள சில முக்கிய அறிவிப்புகள்:

ADVERTISEMENT

இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள் நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. 

அதேபோன்று, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 

மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 100 சதவிகித இருக்கைகளை பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கண்காட்சிக் கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Tags : tn govt
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT