தமிழ்நாடு

திருப்பூர் அருகே அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்

31st Jan 2021 09:27 AM

ADVERTISEMENT

 

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் உள்ள அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 4 ஆவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். இந்தப் போட்டிகளை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடக்கிவைத்தார். 

ADVERTISEMENT

இதில், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இதில், மதுரை,திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இருந்து  600க்கும் மேற்பட்ட காளைகளும், 700க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்களும் பங்கேற்றுள்ளனர். 

காளையை அடக்க முயற்சிக்கும் மாடுபிடி வீரர்கள்.

வாடிவாசல் இருபுறமும் 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் போட்டிக்கு வருவோரின் வாகனங்களை நிறுத்த 7 இடங்களில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு தங்க காசு, இருசக்கர வாகனம், பாத்திரம்,பீரோ,கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT