தமிழ்நாடு

அலகுமலை ஜல்லிக்கட்டு: தொடங்கி நடைபெற்று வருகிறது

31st Jan 2021 11:11 AM

ADVERTISEMENT

பல்லடம்:  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம் அலகுமலை அடிவாரத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் முன்னிலை வகித்தார்.

ADVERTISEMENT

அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத் தலைவர் பழனிசாமி வரவேற்றார். இப்போட்டியை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இருந்து  600க்கும் மேற்பட்ட காளைகளும், 700க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

வாடிவாசல் இருபுறமும் 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி வசதி அமைக்கப்பட்டுள்ளது.  விழாவிற்கு வருவோரின் வாகனங்களை நிறுத்த 7 இடங்களில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு தங்க காசு, மோட்டார் பைக், ஸ்கூட்டர், பாத்திரம், கட்டில் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விழாவில் காங்கேயம் சட்டப் பேரவை உறுப்பினர் தனியரசு, பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சிவாச்சலம், ஒன்றிய அதிமுக செயலாளர் பல்லடம் சித்துராஜ், உகாயனூர் பழனிச்சாமி, காட்டூர் பிரகாஷ், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் பாரிவேந்தர் உள்பட பலர் பங்கேற்றனர்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT