தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் அதிமுக சார்பில் முப்பெரும் விழா

31st Jan 2021 12:47 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி:  கும்மிடிப்பூண்டியில் முன்னாள் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பி.வேணுகோபாலின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முப்பெரும் விழா நடத்தப்பட்டது.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. டாக்டர் பி.வேணுகோபாலின் 2018-2019ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்களுடன் கூடிய இரு சக்கர வாகனம் வழங்குதல், உயர் கோபுர மின்விளக்கு வழங்குதல், பேருந்து நிழற்குடை திறப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 7 மாற்று திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்திய இரு சக்கர வாகனம் வழங்கும் விழாவிற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார்  தலைமைத் தாங்கினார்.

ADVERTISEMENT

நிகழ்விற்கு  அதிமுக இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கோவி.நாராயணமூர்த்தி, ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு, மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜெ.சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், நகர செயலாளர் மு.க.சேகர், ஒன்றிய பொருளாளர் வெங்கடகிருஷ்ணன், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் இமயம் மனோஜ், மாணவரணி முன்னாள் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், பொன்னேரி எம்எல்ஏவுமான சிறுணியம் பி.பலராமன், கும்மிடிப்பூண்டி  கே எஸ் விஜயகுமார், எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர் ஜெயபால்  வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்வை ஒட்டி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர்  டாக்டர் பி வேணுகோபால்  7 மாற்றுத்திறனாளிகளுக்கு  இணைப்பு சக்கரம் பொருத்திய  இருசக்கர வாகனம்  வழங்கி பேசுகையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் தமிழகம் மருத்துவ துறையில் மிக பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது என்றும், இந்தியாவிலேயே தமிழகம் தான் கரோனா சிகிச்சையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்றார்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் 5 லட்சம் மதிப்பில் உயர் கோபுர மின்விளக்கையும், கெட்ணமல்லி ஊராட்சியில் 5 லட்சம் மதிப்பிலான பேருந்து  நிறுத்த நிழற்குடையையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பி.வேணுகோபால் திறந்து வைத்தார்.

நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ணன்கோட்டை கோவிந்தசாமி,பெரிய ஓபுளாபுரம் செவ்வந்தி மனோஜ், பாதிரிவேடு என்.டி.மூர்த்தி, அதிமுக தகவல் தொழிற்நுட்ப அணி நிர்வாகி என்.சிவா, கே.ஏ.ஆ.ஆரோன், ஆர்.சி.சுரேஷ், அதிமுக நிர்வாகிகள் எஸ்.டி.டி.ரவி, எம்.ஏ.மோகன், தீபக் செந்தில், தீபக், ஒன்றிய கவுன்சிலர்கள் ரவிக்குமார், ஏ.டி.நாகராஜ், தேவி சங்கர், மெய்யழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT