திருப்பூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை திருப்பூர் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் சனிக்கிழமை துவக்கி வைத்தார்.
திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லூர் ஊராட்சி கன்னிமார் தோட்டம், ரூபா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் அமைத்தல், காளிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆதிதிராவிடர் காலணியில் தார் சாலை அமைத்தல், புதிய அங்கன்வாடி கட்டடம் திறந்து வைத்தல், கூட்டுக் குடிநீர் திட்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் என மொத்தம் ரூ.45 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றது.
இப்பணிகளை திருப்பூர் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் துவங்கி வைத்தார். பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் ஒன்றியக் குழுத் தலைவர் சொர்ணாம்பாள் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர்ஜஸ்வர்யா மகாராஜ், பொறுப்பாளர் சந்திரசேகர், பொன்னுலிங்கம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சாந்தாமணி சி.டி.சி.வேலுசாமி, சுகன்யா வடிவேல், உதவிப் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.