தமிழ்நாடு

திருமலை நாயக்கர் பிறந்தநாள்: அமைச்சர்கள் மாலையணிவித்து மரியாதை

DIN

மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாளையொட்டி தமிழக அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

மன்னர்  திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை திருமலை நாயக்கர் மகால் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல,  நாயக்கர் சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் சார்பில் திருமலை நாயக்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாஜக சார்பில் அக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் சுதாகர் ரெட்டி, மாநிலப் பொதுச் செயலர் இராம.ஶ்ரீனிவாசன், மாவட்டத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் திருமலை நாயக்கரின் பிறந்தநாளையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது. சங்கத்தின் தலைவர் ப.முத்துவேல்ராஜ்,  நாயுடு நாயக்கர் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் தலைமைச் செயலருமான பா.ராமமோகன்ராவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மாமன்னர் திருமலை நாயக்கர் சமூக நலச்சங்கம் சார்பில் சங்கத் தலைவர் தி.ராதாகிருஷ்ணன் தலைமையில் திருமலை நாயக்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், சுந்தரராஜன், ராஜேந்திரன், இளங்கோ, முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் ஆரப்பாளையம் குறுக்கு சாலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு, மாநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளபதி தலைமையில் திமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். மதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் புதூர் மு.பூமிநாதன், துணைச் செயலர் ஸ்ருதி ரமேஷ்,தொழிற்சங்க மாநில இணைப் பொதுச் செயலர் மகபூப் ஜான் ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT