தமிழ்நாடு

கதித்தமலையில் வெற்றிவேலாயுதசுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம்

DIN

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் உள்ள கதித்தமலை வெற்றிவேலாயுதசுவாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் உள்ள கதித்தமலை வெற்றிவேலாயுதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் தேர்த் திருவிழாவானது விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி நிகழாண்டுக்கான தைப்பூச தேர்த் திருவிழாவானது ஜனவரி 20ஆம் தேதி மலைக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜனவரி 21ஆம் தேதி முதல் காலை, மாலை வேளைகளில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இந்தத் தேரானது ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்து பிற்பகல் 3 மணி அளவில் தேர்நிலைத்திடலை வந்தடையவுள்ளது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.  இதையடுத்து, ஜனவரி 30ஆம் தேதி தெப்பக்குளத்தில் சுவாமி உலாவும், ஜனவரி 31ஆம் தேதி வெற்றிவேலாயுத சுவாமிக்கு மகா அபிஷேகமும், பிப்ரவரி 1ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் கதித்தமலை தைப்பூசத் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT