தமிழ்நாடு

சசிகலா விடுதலை: அமமுக கட்சி சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

27th Jan 2021 01:19 PM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தண்டனை காலம் முடிந்து விடுதலை அடைந்ததையொட்டி, ஊத்தங்கரை 4 முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 

நகர அவைத் தலைவர் ராதா தலைமை வகித்தார். மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவைத் தலைவர் கங்காதரன், வடக்கு ஒன்றிய செயலாளர் அருணகிரி, மீனவர் அணி மாவட்ட செயலாளர் பழனி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி பொருளாளர் முருகன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வள்ளி பரமசிவம். மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் முனியம்மாள், வடக்கு ஒன்றிய பொருளாளர் மகாலிங்கம், கிளைச் செயலாளர்கள் முருகேசன், நடுப்பட்டி ஊராட்சி செயலாளர் எம்.சேட்டு,  பாவக்கல் கிருஷ்ணன், மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை இணைச்செயலாளர் மண்ணை எம். குமார், காட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நான்கு முனை சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 

நிகழ்ச்சியில் அமமுக கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT