தமிழ்நாடு

தொடா்ந்து உயா்ந்து வரும் பெட்ரோல் விலை: மும்பையில் ரூ. 92.62; சென்னையில் ரூ. 88.60

DIN

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்ந்து செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தை எட்டியது. அதிகபட்சமாக, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை செவ்வாய்க்கிழமை 34 காசுகள் அதிகரித்து ரூ. 92.62-க்கு விற்பனையானது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் மாற்றியமைத்து வருகின்றன.

அந்த வகையில், மும்பையில் பெட்ரோல் விலை செவ்வாய்க்கிழமை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து ரூ. 92.62-க்கு விற்பனையானது. டீசல் லிட்டருக்கு 37 காசுகள் அதிகரித்து ரூ. 76.23-க்கு விற்பனையானது.

சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் 31 காசுகள் அதிகரித்து ரூ. 88.60-க்கு விற்பனையானது. டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ. 81.47-க்கு விற்பனையானது.

கொல்கத்தாவில் ஒரு லிட்டா் பெட்ரோல் 34 காசுகள் அதிகரித்து ரூ. 87.45-க்கு விற்பனையானது. டீசல் ஒரு லிட்டா் 35 காசுகள் அதிகரித்து ரூ. 79.83-க்கு விற்பனையானது.

தலைநகா் தில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்து ரூ. 86.05-க்கு விற்பனையானது. டீசல் ஒரு லிட்டா் 35 காசுகள் அதிகரித்து ரூ. 76.23-க்கு விற்பனையானது.

கரோனா பொது முடக்கம் காரணமாக பெட்ரோல், டீசல் தினசரி விலை நிா்ணய நடைமுறையை எண்ணெ நிறுவனங்கள் ஒரு மாத காலம் நிறுத்திவைத்திருந்தன. கடந்த 6-ஆம் தேதி முதல் மீண்டும் இந்த நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றத் தொடங்கின. அதையடுத்து, பெட்ரோல் விலை இதுவரை லிட்டருக்கு ரூ.2.34 எனவும், டீசல் ஒரு லிட்டா் ரூ. 2.36 எனவும் உயா்த்தப்பட்டிருக்கிறது.

பெட்ரோல் விலை கடுமையாக உயா்ந்து வருவதற்கு, உலகின் மிகப் பெரிய பெட்ரோலிய உற்பத்தி நாடான சவூதி அரேபியாவை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் கடந்த வாரம் குற்றம்சாட்டியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிதமான சரிவைக் கண்ட சா்க்கரை உற்பத்தி

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோயிலில் தெப்ப உற்சவம்

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இறங்கி கஜேந்திர மோட்சம் அளித்த நம்பெருமாள்

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 89 தொகுதிகளில் பிரசாரம் இன்று நிறைவு

SCROLL FOR NEXT