தமிழ்நாடு

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராகிறார் ராஜீவ் ரஞ்சன்?

27th Jan 2021 09:20 PM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாளராக முன்னாள் நிதித்துறை செயலாளரான கே.சண்முகம் ஐ.ஏ.எஸ் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெற வேண்டிய அவருக்கு மத்திய அரசு இரண்டு முறை பதவி நீட்டிப்பு அளித்துள்ளது. அந்த வகையில் அவரது இரண்டாவது பணி நீட்டிப்பு வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு முன்னர் மத்திய அரசுப் பணியில் இருந்த ராஜிவ் ரஞ்சன் தற்போது தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவே அவர் தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT