தமிழ்நாடு

கம்பத்தில் ஆணழகன் போட்டி: சின்னமனூர் இளைஞர் சாம்பியன்ஷிப்

27th Jan 2021 11:52 AM

ADVERTISEMENT

 

கம்பம்: தேனி மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி கம்பத்தில் நடைபெற்றது. இதில் சின்னமனூரைச் சேர்ந்த இளைஞர் ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார்.

தேனி மாவட்டம் கம்பத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு டைட்டில் பவர் ஜிம் சார்பாக தேனி மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த போட்டியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு ஊர்களிலிருந்து இளைஞர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

இந்த போட்டியில், 45 கிலோ எடை, 62  கிலோ எடை,  80 கிலோ எடை உள்பட 7 வகையான  பிரிவுகளில் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த ஆணழகன் போட்டியில் 170க்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

போட்டியின் முடிவில் சின்னமனூரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் ஓவரால் சாம்பியன்ஷிப் பட்டங்களைப் பெற்று  மிஸ்டர் தேனி என்ற பட்டத்தை  தட்டிச் சென்றார். ஏராளமான இளைஞர்கள் பார்வையாளர்களாக  கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT