தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: டெல்டா பள்ளி சாதனை மாணவருக்குப் பாராட்டு

27th Jan 2021 04:13 PM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் டெல்டா பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த சாதனை படைத்த மாணவரை, பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. 

டெல்டா பப்ளிக் மெட்ரிக் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவர் ஆர்.சந்தோஷ் சரவணன், கண்களைக்  கட்டிக் கொண்டு எதிரில் இருப்பவைகளை துல்லியமாகச் சொன்னார். ரூபாய் நோட்டில் இருக்கும் வரிசை எண், அலைபேசியில் உள்ள படங்கள், விசிட்டி கார்டில் உள்ள வாசகங்கள் மற்றும் சட்டையின் நிறங்கள் என அனைத்தையும் மிகச் சரியாகச் சொல்லுகிறார். 

அந்த அதிசயத் திறமையைப் பாராட்டி, அண்மையில் மன்னார்குடியில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எம்.துரை, அதிசய மாணவர் சந்தோஷ் சரவணனைப் பாராட்டி, மாயக்கண் மாணவன் என்ற பட்டத்தை வழங்கி, நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. இதனையடுத்து, டெல்டா பப்ளிக் பள்ளியின், அறக்கட்டளைத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான  நவாஸ்கனி,செயலாளர் ஹாஜா பக்ருதீன் ஆகியோரின் ஆலோசனையின்படி, முதல்வர் ஜோஸ்பின் ஏற்பாட்டில், மாணவர் சந்தோஷ் சரவணனை பாராட்டி, கௌரவிக்கப்பட்டன. 

ADVERTISEMENT

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், சமூக ஆர்வலர் ஜாபர் பாட்சா, மன்னார்குடி வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.வி.ஆனந்த் ஆகியோர் முன்னிலையில், கல்வி அறக்கட்டளை நிர்வாகி ஜெய்னுலாதீன், சந்தோஷ் சரவணனைப் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினார். 

விழாவில், மாணவர் சந்தோஷ் சரவணன் கூறியது,

கண்களைக் கட்டிக்கொண்டு எதிரில் இருப்பவற்றைச் சொல்லுவதற்கு முன்பு, மனதை ஒருநிலைப் படுத்திக்கொள்ள வேண்டும். கைகளுக்கு மசாஜ் கொடுத்துக்கொள்ள வேண்டும். மூளையை அலைபாய விடாமல் நிலைநிறுத்த வேண்டும். அதன் பிறகு, தொட்டுப் பார்க்கக் கூடிய பொருட்களைத் தொட்டுப் பார்த்தும், முகர்ந்து பார்க்கக் கூடியவைகளை முகர்ந்தும் சொல்லப்படுகிறது.

திருவள்ளுவர் தின விழாவில், மாவட்ட எஸ்.பி.துரை, இந்தக் கலையை தனக்குச் சொல்லிக் கொடுக்கச் சொல்லியும், இல்லையேல் எங்களுடன் வந்து விடவும், திருடனை சுலபமாகப் பிடித்து விடலாம் என்றும்,
என்னிடம் கேட்டார் என சந்தோஷ் சரவணன் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT