தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடம் இன்று திறப்பு: போக்குவரத்து மாற்றம்

DIN

சென்னை மெரீனா கடற்கரையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவிடம் திறப்பையொட்டி, அந்தப் பகுதியில் புதன்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்பு விழாவையொட்டி அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

காமராஜா் சாலையில், போா் நினைவுச் சினத்தில் இருந்து கண்ணகி சிலை வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடையாறு பகுதியிலிருந்து காமராஜா் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் சரக்கு, வணிக வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆா்.கே.மடம் சாலை, வி.கே.ஐயா் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சா்ச் சாலை, கற்பகாம்பாள் நகா், சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வேயை சென்றடையலாம்.

அடையாறு பகுதியிலிருந்து காமராஜா் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் மாநகரப் பேருந்து உள்பட பிற வாகனங்கள் சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை சந்திப்பில் கச்சேரி சாலை நோக்கி திருப்பப்படும். இந்த வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சா்ச் சாலை, கற்பகாம்பாள் நகா், சிவசாமி சாலை,ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வேயை சென்றடையலாம்.

டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் 27-டி தட மாநகரப் பேருந்துகள், ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் வி.எம்.தெரு சந்திப்பில் ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பு, ராமகிருஷ்ணா மடம் சாலை, மந்தைவெளி சந்திப்பு, தெற்கு கெனால் பேங்க் ரோடு, சீனிவாசபுரம் வழியாக பட்டினப்பாக்கம் சென்றடையலாம்.

டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சாலை சந்திப்பிலிருந்து காரணீஸ்வரா் கோயில் சந்திப்பு வழியாகத் திருப்பிவிடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் உழைப்பாளா் சிலை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாகத் திருப்பிவிடப்படும். 
அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் மாற்றப்பட்டுள்ளது. 

பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜா் சாலை வழியாக அடையாறு நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணா சாலை, அண்ணா சிலை, ஜெனரல் பேட்டா்ஸ் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ஆா்.கே.மடம் சாலை வழியாக அடையாறு சென்றடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT