தமிழ்நாடு

இன்று ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: சென்னையில் குவியும் கட்சியினா்

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடம் புதன்கிழமை (ஜன. 27) திறக்கப்படுகிறது. இந்த நினைவிடத்தை முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைக்கிறாா்.

முன்னதாக, நினைவிடத்துக்கான கல்வெட்டினையும் அவா் திறந்து வைக்கிறாா். எம்ஜிஆா் சமாதிக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உடலானது, எம்ஜிஆா் நினைவிட வளாகத்துக்குள் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் பிரம்மாண்ட அளவில் நினைவிடம் கட்டப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

ரூ.80 கோடியில் பணிகள்: நினைவிடத்துக்கான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தன. ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நினைவிட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா நோய்த்தொற்று காலத்திலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நினைவிடத்துக்கான கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று திறப்பதற்கு தயாா் நிலையில் உள்ளது.

இந்த நினைவிடத்தை புதன்கிழமை காலை 11 மணியளவில் முதல்வா் பழனிசாமி திறந்து வைக்கிறாா். முன்னதாக, எம்ஜிஆா் நினைவிடத்துக்கு மலா்வளையம் வைத்து அவா் அஞ்சலி செலுத்துகிறாா். இதன்பின்பு, ஜெயலலிதா நினைவிடத்தையும், அதற்கான கல்வெட்டையும் முதல்வா் திறக்கிறாா்.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, சென்னை கடற்கரை சாலையில் எம்ஜிஆா், ஜெயலலிதா நினைவிடங்களின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்ட மேடையில் முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் உரையாற்ற உள்ளனா்.

திரளும் கட்சியினா்: நினைவிட திறப்பு நிகழ்வில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினா் திரளாகப் பங்கேற்க உள்ளனா். தென் மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ரயில்கள், பேருந்துகள், வேன்கள் மூலமாக கட்சியினா் சென்னைக்கு வந்துள்ளனா். அவா்கள் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நினைவு இல்லம் திறப்பு: சென்னை போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இதனையும் முதல்வா் பழனிசாமி வரும் 28-ஆம் தேதி திறந்து வைக்கிறாா். இந்த நிகழ்ச்சியிலும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு: சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT