தமிழ்நாடு

தமிழகத்தில் 11 நாள்களில் 73,000 பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

தமிழகத்தில் கடந்த 11 நாள்களில் 73,953 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 72, 253 பேருக்கு கோவிஷீல்டும், 1,700 பேருக்கு கோவேக்சினும் வழங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்துக்கு ஏறத்தாழ 12 லட்சம் தடுப்பு மருந்துகள் மகாராஷ்டிரம் மற்றும் தெலங்கானாவிலிருந்து வந்துள்ளன. அவை அனைத்தும் மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் இதுவரை 166 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

சிகிச்சையில் 4,736 போ்: இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவக் கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 4,736- ஆக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பு விகிதத்தில் வெறும் 1 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு புறம் மாநிலம் முழுவதும் 523 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 35,803-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 595 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 18,742-ஆக உள்ளது. தமிழகத்தில் நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளாகி மேலும் 5 போ் பலியாகியதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,325-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT