தமிழ்நாடு

ஈரோட்டில் அமமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

27th Jan 2021 05:05 PM

ADVERTISEMENT

 

சசிகலா இன்று விடுதலை ஆனதை ஒட்டி தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். 

அதன்படி ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம் அ.ம.மு.க சார்பில் பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.தங்கராஜ் தலைமை தாங்கினார்.

இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஈரோடு ஜி.எச். ரவுண்டானாவில் தங்கராஜ் தலைமையில் அ.ம.மு.க.வினர் பட்டாசு வெடித்தனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT