தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் பன்னிரு திருமுறை பதிக விளக்க 12-ஆம் ஆண்டு விழா

27th Jan 2021 04:45 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோவிலில் குருவருள் திருமுறை மன்றம் சார்பில் பன்னிரு திருமுறை பதிக விளக்கக் கூட்டம் மாதம்தோறும் நடைபெற்று வருகிறது. இதன் பன்னிரண்டாம் ஆண்டு துவக்க விழா  திருக்கோவிலில் வைத்து நடைபெற்றது.

குருவருள் திருமுறை மன்றம் தலைவர் சிவக்கொழுந்து முதலியார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தார். ஜெய சுகந்தி மாரியப்பன் இறைவணக்கம் பாடினார், சிவ சரவணன் அனைவரையும் வரவேற்று பேசினார், திருநாவுக்கரசர் நற்பணி மன்ற தலைவர் டாக்டர் கேபி முத்துசாமி, சைவத்திரு சிவனணைந்த பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

மதுரை பேராசிரியர் சொ சொ மீ சுந்தரம் விழா சிறப்புரை ஆற்றினார். வைத்தியநாதசுவாமி கோவில் தக்கார் இளங்கோவன் பன்னிரு திருமுறை பதிக விளக்க மலரை வெளியிட அதனை வைத்தியநாத சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் ஜவஹர் பெற்றுக்கொண்டார்.

ADVERTISEMENT

குருவருள் திருமுறை மன்றம் செயலர் கோவிந்தன் நன்றி உரையாற்றினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர் முடிவில் மம்சாபுரம் தர்மசாஸ்தா கோவில் அறங்காவலர் டாக்டர் கூடலிங்கம், மம்சாரம் கூடம்மாள் ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT