தமிழ்நாடு

ஜிஎஸ்டி இழப்பீடு தொகை: 13 - ஆவது தவணையாக தமிழகத்திற்கு ரூ.339.70 கோடி ஒதுக்கீடு

DIN

புது தில்லி: ஜிஎஸ்டி இழப்பீடு தொகையின் 13வது தவணையாக ரூ.6,000 கோடியை மாநிலங்களுக்கு திங்கள்கிழமை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதில் தமிழகத்துக்கு ரூ.339.70 கோடியும், புதுச்சேரிக்கு ரூ. 39.40 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதன் மூலம் மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக ரூ.1.10 லட்சம் கோடி வரை சிறப்பு சாளரத்தின் கீழ் கடனாக பெற மத்திய அரசு அனுமதியளித்து வருகிறது. இதில் தற்போது 13 - வது தவணையாக 23 மாநிலங்களுக்கும் 3 யூனியன் பிரதேசத்திற்கும் ரூ.6,000 கோடிக்கான அனுமதியை திங்கள்கிழமை மத்திய நிதித்துறை வழங்கியுள்ளது. இதிலிருந்து 23 மாநிலங்களுக்கு ரூ. 5,516.60 கோடியும், தில்லி, ஜம்மு-காஷ்மீா், புதுச்சேரி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 483.40 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த 13 -வது தவணையில் தமிழகத்திற்கு ரூ. 339.70 கோடியும் புதுச்சேரிக்கு ரூ. 39.40 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை, ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையில், 70 சதவீதம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சோ்த்து மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.71,099.56 கோடியும், சட்டப்பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 6,900.44 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் இந்த தொகை, 5.3 சதவீத வட்டியில் கடனாகப் பெறப்பட்டுள்ளது. மொத்த மாநில உற்பத்தியில் 0.50 சதவீத அளவுக்கு கடனை பெற அனுமதிக்கப்படுகிறது.

மொத்த தமிழக உற்பத்தியில் ரூ.9627 கோடியாக அளவிடப்பட்டது. இதில் தமிழகத்திற்கு ரூ.4890.14 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.525.14 கோடி சிறப்பு சாளர அடிப்படையில் கூடுதலாக கடன் திரட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூா், மிஸோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகிய மீதமுள்ள ஐந்து மாநிலங்களில் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வருவாய் பற்றாக்குறை ஏற்படாததால் இந்த மாநிலம் ஒதுக்கீட்டை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஓரிடம்; போட்டி வேறிடம்!

அன்பைப் பரிமாறிய பிரேமலதா - தமிழிசை

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

SCROLL FOR NEXT