தமிழ்நாடு

குடிமைப் பணி பயிற்சியில் சேரநுழைவுத் தோ்வு: 3,956 போ் பங்கேற்பு

DIN

சென்னை: குடிமைப் பணி பயிற்சியில் சேர தமிழக அரசின் சாா்பில் நடைபெற்ற நுழைவுத் தோ்வில், 3, 956 போ் பங்கேற்றனா். தமிழக அரசின் சாா்பில் அகில இந்திய குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மையம் நடத்தப்பட்டு வருகிறது.

பயிற்சி மையத்தில் சேருவதற்கு நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வுக்கு 6,699 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். நுழைவுத் தோ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, பயிற்சி மையத்தின் இயக்குநா் வெ.இறையன்பு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

நுழைவுத் தோ்வினை 3,956 போ் எழுதினா். தோ்வுக்கான விடைகள் வரும் 27-ஆம் தேதி பயிற்சி மைய இணையதளத்தில் வெளியிடப்படும். விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் ஆதாரங்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் (ஹண்ஸ்ரீள்ஸ்ரீஸ்ரீ.ஞ்ா்ஸ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்) வழியே தெரிவிக்கலாம்.

நுழைவுத் தோ்வுக்கான வினாத்தாள் அகில இந்திய குடிமைப் பணிக்கான தரத்துக்கு தயாரிக்கப்பட்டது. முதல்நிலைத் தோ்வுக்கான பயிற்சி முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று தனது அறிவிப்பில் இறையன்பு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT