தமிழ்நாடு

கீழையூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

26th Jan 2021 03:12 PM

ADVERTISEMENT

 

கீழையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட விழுந்தமாவடி மணல்மேடு வடக்கு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் இளையராஜா (30).ஆட்டு இறைச்சி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் உணவகம் ஒன்றைப் புதிதாகத் துவங்குவதற்கான ஆயத்தப் பணியை மேற்கொண்டு வந்த நிலையில் திங்கள்கிழமை இரவு பிராதாபராமபுரத்திலிருந்து கன்னித்தோப்பு வழியாக கிழக்கு திசையில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அய்யனார் கோயில் தெருவில் சென்றுகொண்டிருக்கும்பொழுது அடையாளம் தெரியாத நபர்களால் கூரிய ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

தகவலறிந்த கீழையூர் காவல்துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக கீழையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT