தமிழ்நாடு

வெங்கல்: கிரிக்கெட் மற்றும் கைப்பந்து போட்டிகளை ஊராட்சிமன்ற தலைவர் துவக்கி வைத்தார்

26th Jan 2021 04:39 PM

ADVERTISEMENT

 

குடியரசு தினத்தை முன்னிட்டு வெங்கல் ஊராட்சிமன்ற சார்பில் மாபெரும் கிரிக்கெட் மற்றும் கைப்பந்து போட்டிகளை ஊராட்சிமன்ற தலைவர் சுகந்திராணி லிங்கன் துவக்கி வைத்தார்.

72ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர்  மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் கிரிக்கெட் மற்றும் கைபந்து போட்டிகள் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் வெங்கல் கிராமத்தில் உள்ள 10 அணிகள் பங்கேற்றனர். இதில் 10 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வெங்கல் ஊராட்சிமன்ற தலைவர் சுகந்திராணி லிங்கன், கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி இதில் கலந்துகொண்ட 10 அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து டாஸ்க் போட்டு விளையாட்டை துவக்கி வைத்தார் இதில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கணபதி மற்றும் 8 வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் உமாநாத், வழக்கறிஞர் வெங்கல் ரஜனி ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT