தமிழ்நாடு

பவானியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக இருசக்கர வாகன ஊர்வலம்

26th Jan 2021 02:41 PM

ADVERTISEMENT

 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பவானியில் இருசக்கர வாகன ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பவானி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் அந்தியூர் பிரிவு, மேட்டூர் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே முடிவடைந்த இந்த ஊர்வலத்துக்கு திமுக நகரச் செயலாளர் ப.சீ.நாகராஜன் தலைமை வகித்தார். 

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.கே.பழனிச்சாமி, காங்கிரஸ் நகரத் தலைவர் கதிர்வேல், மதிமுக நகரச் செயலாளர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். இ.கம்யூ. கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ப.பா.மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், விவசாயத் தொழிலாளர் சங்க வட்டாரச் செயலாளர் எஸ்.மாணிக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றிய செயலாளர் நாகராஜ், கொமதேக நகரச் செயலாளர் ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்ப வேண்டும் என ஊர்வலத்தில் வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT