தமிழ்நாடு

திருச்சியில் ஆட்சியர் சு. சிவராசு தேசியக் கொடி ஏற்றினார்

26th Jan 2021 08:40 AM

ADVERTISEMENT

 

திருச்சி: நாட்டின் 72ஆவது குடியரசு நாளை முன்னிட்டு திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

தொடர்ந்து பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 419 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 110 பேருக்கு குடியரசு நாள் பதக்கங்களை வழங்கி கெளரவித்தார். 

முன்னதாக காந்தி சந்தையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்குச் சென்று தியாகிகளை கௌரவித்தார்.

ADVERTISEMENT

Tags : Republic Day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT