தமிழ்நாடு

தஞ்சாவூர் விவசாயிகள் பேரணியில் தள்ளுமுள்ளு

26th Jan 2021 02:52 PM

ADVERTISEMENT

 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லி போராட்டத்துக்கு ஆதரவாகவும் தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தஞ்சாவூர் அருகே மேல வஸ்தா சாவடியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இப்பேரணி தொடங்கியது. டிராக்டர்கள் பேரணியாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்தது. என்றாலும், 4 டிராக்டர்கள், ஒரு மாட்டு வண்டியுடன் போராட்டக் குழுவினர் பேரணியைத் தொடங்கினர். இவற்றை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும், போராட்டக் குழுவினர் தடையை மீறி பேரணியாகச் சென்றனர்.

ADVERTISEMENT

மீண்டும் பாரத் கல்லூரி அருகே இரும்பு தடுப்புகள் வைத்து இப்பேரணியைக் காவல் துறையினர் தடுத்தனர். என்றாலும் போராட்டக் குழுவினர் தடுப்புகளை அகற்றி பேரணியைத் தொடர்ந்தனர். இப்பேரணி தொல்காப்பியர் சதுக்கம் வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து செல்ல காவல் துறை அனுமதி மறுத்ததால் புதிய பேருந்து  நிலையத்துடன் முடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT