தமிழ்நாடு

ராணிப்பேட்டையில் குடியரசு நாள் விழா கோலாகலம்

26th Jan 2021 09:03 AM

ADVERTISEMENT

 

நாட்டின் 72 ஆவது தேசிய குடியரசு நாள் விழா, ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில், ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன், கூடுதல் ஆட்சியர் உமா, மாவட்ட வழுவாய் அலுவலர் எம்.ஜெயச்சந்தின், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் க.இளம்பகவத் ஆகியோர் நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் வெண்புறாக்களை பறக்க விட்டனர். 
தொடர்ந்து காவல்துறையின் அலங்கார  அணிவகுப்பு மறியாதையை ஏற்றார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 21 தலைமை காலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் பதக்கங்களையும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், வருவாயார் துறையில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து அரசுத் துறை   அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ராணிப்பேட்டை உட்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கே.டி.பூரணி, அரக்கோணம் உள்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன்  மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள், சமுக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

Tags : republic day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT