தம்மம்பட்டி, கெங்கவல்லியில் காங்கிரஸ் சார்பில் குடியரசு நாள் விழா கொண்டாடப்பட்டது.
தம்மம்பட்டி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நகர, ஒன்றிய நிர்வாகிகள் ராமராஜ், ரமேஷ் ரவிக்குமார் முன்னிலையில் சேலம் மாவட்ட துணைத் தலைவர் திருச்செல்வன் பேருந்து நிலையத்திலும், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் கவுன்சிலர் கர்ணனும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்.
கெங்கவல்லிநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்த குடியரசு தின விழாவில் வட்டார செயலாளர் முருகானந்தம், சிவாஜி முன்னிலையில் காமராஜ் தேசியக்கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ADVERTISEMENT