தமிழ்நாடு

நெல்லையில் குடியரசு நாள் விழா

26th Jan 2021 09:06 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

உள்ளாட்சித் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 399 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ரூ. 94.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சங்கர்நகர் திருமலை சிலம்ப பள்ளி கலைஞர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT


படங்கள்- உ.ச.சாய்வெங்கடேஷ்

Tags : Republic Day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT