தமிழ்நாடு

நீடாமங்கலம் பகுதியில் குடியரசு நாள் விழா

26th Jan 2021 02:33 PM

ADVERTISEMENT


நீடாமங்கலம்: நாட்டின் 72வது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மணிமன்னன் தேசியக் கொடியேற்றினார். 

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையர் கலைச்செல்வன், கூடுதல் ஆணையர் ஞானம் ஆகியோர் முன்னிலையில் ஒன்றியக்குழுத் தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் தேசிய கொடியேற்றிப் பேசினார். மேலாளர் சோமசுந்தரம் வரவேற்று பேசினார்.

சத்துணவு மேலாளர் நேரு, பொறியாளர் சர்மிளா ஆகியோர் பேசினர். திட்ட மேலாளர் இளங்கோவன் நன்றி கூறினார். நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் நிர்வாக அதிகாரி சங்கர் தேசியக் கொடியேற்றினார்.

நீடாமங்கலம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுப்ரியா, நீடாமங்கலம் கூட்டுறவு வங்கியில் தலைவர் பர்வீன்பேகம் ஆகியோர் தேசியக் கொடியேற்றினர். 
நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்விக் குழுத் தலைவர் இ.ஷாஜகான் முன்னிலையில்  பெற்றோர் சங்கத்தலைவர் எம்.அப்பாவு தேசியக்கொடியேற்றினார். 
நீலன்மெட்ரிக்மேல் நிலைப்பள்ளியில் பள்ளியின் முதல்வர் புவனேஸ்வரி முன்னிலையில் தாளாளர் நீலன்.அசோகன் தேசியக் கொடியேற்றினார்.

நீடாமங்கலம் இந்துஸ்தான் மக்கள் இயக்க காரியாலயத்தில் ஆலோசகர் டி .எஸ் .கே.நேரு தேசியக் கொடியேற்றினார். இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளியில் உதவும் மனங்கள் அமைப்பு தலைவர் எஸ்.எஸ்.குமார் தேசியக் கொடியேற்றினார். இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் குடியரசு நாள் விழா கொண்டாடப்பட்டது.

ADVERTISEMENT

குடியரசு நாள் விழாவை முன்னிட்டு நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தேசியக்கொடியேற்றி பேசுகிறார் ஒன்றியக்குழுத் தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன்.
 

Tags : Republic Day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT