தமிழ்நாடு

காரைக்காலில் குடியரசு நாள் விழா 

26th Jan 2021 12:32 PM

ADVERTISEMENT


காரைக்கால்: காரைக்காலில் நடைபெற்ற குடியரசு நாள்  விழாவில் மாவட்ட ஆட்சியர்  அர்ஜூன் சர்மா தேசியக் கொடியேற்றிவைத்து, காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

காரைக்கால் கடற்கரை சாலையில் குடியரசு நாள்  விழா கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தேசியக் கொடியேற்றிவைத்தார். பின்னர் புதுச்சேரி காவல்துறை சட்டம் ஒழுங்கு மற்றும் இந்தியன் ரிசர்வ் பெட்டாலியன் காவல் பிரிவினர், ஊர்க்காவல் பிரிவினர், தீயணைப்புத்துறையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அணிவகுப்பை பார்வையிட்டார்.

அணிவகுப்பில் ஊர்க்காவல் பிரிவுக்கு முதல் பரிசும், இந்தியன் ரிசர்வ் பெட்டாலியன் பிரிவுக்கு 2-ஆம் பரிசும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு ஆறுதல் பரிசையும் ஆட்சியர் வழங்கினார். கரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பல்வேறு நிலையில் சிறப்பாக பணியாற்றுவதாக நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

கரோனா பரவல் தடுப்பு விவகாரத்தில் மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு உதவிகள் செய்தமைக்காக ஓ.என்.ஜி.சி., காரைக்கால் துறைமுகம், கெயில் இந்தியா, கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனத்தினரை ஆட்சியர் கௌரவித்தார்.

ADVERTISEMENT

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.  சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிகாரிகா பட், துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ரகுநாயகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கரோனா பரவல் காரணமாக வழக்கமாக நடைபெறக்கூடிய அரசுத்துறை அலங்கார ஊர்திகள், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நிகழாண்டு இடம்பெறவில்லை. பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நிகழ்வில் அமரச் செய்யப்பட்டனர்.
 

Tags : Karaikal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT