தமிழ்நாடு

போடியில் குடியரசு நாள் விழா கோலாகலம்

26th Jan 2021 02:52 PM

ADVERTISEMENT


போடி: போடியில் 72 ஆவது குடியரசு நாள் விழா செவ்வாய் கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

போடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஜெ.உம்முல் பரிதா தலைமையில் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.  நிகழ்ச்சியில் வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் பலர் பங்கேற்றனர். போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மணிமாறன் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

போடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டது. போடி நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் த.சகிலா தேசியக் கொடி  ஏற்றி  வைத்தார்.  பொறியாளர் குணசேகர்  மற்றும்  நகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

போடி ஜ.கா.நி. ஆரம்பப் பள்ளியில் செயலர் செல்வராஜ் தலைமையில் தலைவர் வடமலைராஜைய பாண்டியன் தேசியக் கொடியேற்றி வைத்தார். தலைமையாசிரியை ராஜகனி மற்றும் பலர் பங்கேற்றனர். போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தலைமையாசிரியர் ஜெயக்குமார் தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார்.

ADVERTISEMENT

போடி அரசு பொறியியல் கல்லூரி, ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி, மெட்ரி பள்ளி, திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளி, பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, தேவாரம்,  உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் குடியரசு நாள் விழா கோலாகலமாக  நடைபெற்றது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

இதேபோல் அன்னை இந்திரா நினைவு ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் சிவனேஸ்வரசெல்வன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.   போடி தருமத்திப்பட்டி ஏ.எச்.எம். டிரஸ்ட் வளாகத்தில் உள்ள நேசக்கரங்கள் முதியோர், ஆதரவற்றோர் இல்லம், தொழிற்பயிற்சி கூடம் ஆகியவற்றில் குடியரசு தினவிழா கொடியேற்றி கொண்டாடப்பட்டது. டிரஸ்ட் இயக்குநர் முகமது சேக் இப்ராஹிம் மற்றும் பலர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT