தமிழ்நாடு

தம்மம்பட்டி பள்ளிகளில் குடியரசு நாள் விழா

26th Jan 2021 01:24 PM

ADVERTISEMENT

 

தம்மம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் அன்பழகன் முன்னிலையில் முன்னாள் பேரூராட்சித்துணைத் தலைவர் ஸ்ரீகுமரனும், ஈச்சஓடைப்புதூர் துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் ஹரி ஆனந்த் முன்னிலையில் உலிபுரம் ஊராட்சித்துணைத்தலைவர் செல்வராஜ் கொடியேற்றினர். சித்ரா பரிசுகள் வழங்கினார். 

உலிபுரம் அண்ணாநகர் துவக்கப்பள்ளியில் நிகார்பானு தலைமையில் குடியரசு விழா நடைபெற்றது. காந்திநகர் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் பச்சமுத்து, பிடிஏ நிர்வாகி சங்கர் முன்னிலையில் முன்னாள் கவுன்சிலர் சுரேஷும், மூலப்புதூர் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியை தேவகஸ்தூரி முன்னிலையில் கோவிந்தராஜீம் கொடியேற்றினர்.

வாழக்கோம்பை நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி வார்டு கவுன்சிலர் தேவிசரவணன் முன்னிலையில், ஜங்கமசமுத்திரம் ஊராட்சித்தலைவர் பெரியசாமி கொடியேற்றினார். மூக்காகவுண்டன்புதூர் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியை வெற்றிச்செல்வி கொடியேற்றினார்.

ADVERTISEMENT

செங்காடு அரசு துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் ஜான்பிரிட்டோ முன்னிலையில் கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலர் அந்தோணிமுத்து கொடியேற்றினார். தம்மம்பட்டி லக்கி மெட்ரிக் பள்ளியில் முதல்வர் பர்ஜாத்முகமது முன்னிலையில் தாளாளர் குல்முகமது கொடியேற்றினார். கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் என்.டி.செல்வம், கொடியேற்றி, இனிப்புகள், பரிசுகள் வழங்கினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT