தமிழ்நாடு

கம்பம் கூடலூர் பகுதியில் குடியரசு நாள் விழா

26th Jan 2021 02:44 PM

ADVERTISEMENT


கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் குடியரசு நாள் விழாக் கொண்டாடப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியில் குடியரசு நாள் விழாக் கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜி.ரேணுகா அனைவரையும் வரவேற்றார்.

கல்லூரி இணைச்செயலாளர் ரா.வசந்தன் இனிப்புகள் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் மற்றும் கல்லூரி பேராசிரியைகள் கலந்து கொண்டனர்.

கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையாளர் கண்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

ADVERTISEMENT

கம்பம் நகராட்சி ஆணையாளர் ஜெயச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் கே.சிலைமணி தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் என்.எஸ் .கீதா ஆகியோர் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர்.

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் ஆறுமுகம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார், கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் கே. முத்துமணி, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் தலைவர் அ.மொக்கப்பன், நாராயணத் தேவன் பட்டி ஊராட்சியில் தலைவர் பொன்னுத்தாய் செல்லையா, சுருளிப்பட்டி ஊராட்சியில் தலைவர் நாகமணி வெங்கடேசன், ஆங்கூர் பாளையம் ஊராட்சியில் தலைவர் சாந்தி பரமன் ஆகியோர் தேசியக் கொடிகளை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்கள்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT