தமிழ்நாடு

சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை

26th Jan 2021 02:27 PM

ADVERTISEMENT


சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி வழங்கறிஞர் ராஜராஜன் மத்திய அரசுக்கு மனு அளித்துள்ளார்.  

சொத்துக்குவிப்பு  வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள வி.கே.சசிகலாவின் தண்டனைக் காலம் முடிந்து அவர் நாளை மறுநாள்(ஜன.27) விடுதலை ஆகவிருக்கிறார். 

இதனிடையே சில நாள்களுக்கு முன்னதாக சசிகலாவுக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கரோனா தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருகிறார். 

சசிகலா வருகிற 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவது உறுதி  எனவும்  கர்நாடக சிறைத்துறை தகவல் தெரிவித்தது. இதையடுத்து நாளை விடுதலையாகும் சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்கறிஞர் வாசுகி ராஜராஜன் மத்திய அரசுக்கு மனு அளித்துள்ளார்.

ADVERTISEMENT

சென்னையில் அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா இல்லத்தில் தங்கவுள்ள சசிகலாவின் பாதுகாப்பு கருதி, அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். 

Tags : சசிகலா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT