தமிழ்நாடு

தருமபுரியில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி அமைதிப் பேரணி

26th Jan 2021 12:35 PM

ADVERTISEMENT

 

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் எனக் கோரி, தருமபுரியில் தொழிலாளர்கள், விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தேசிய கொடியேந்தி அமைதிப் பேரணி நடைபெற்றது.

தருமபுரி ராஜகோபால் பூங்கா முன்பு தொடங்கி பேரணிக்கு சிஐடியு தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சி.நாகராஜன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, ஐஎன்டியுசி‌ தொழிற்சங்கத்தினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் தங்களது கைகளில் தேசியக் கொடிகளை ஏந்தி பேரணியாக வந்தனர். 

இப்பேரணி தொலைத்தொடர்பு நிலைய அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து அங்கு நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் எஸ்.தேவராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ஏ.குமார், முன்னாள் எம்எல்ஏ பி.டில்லிபாபு,  விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்கள் சோ.அர்ஜுனன், எஸ்.சின்னசாமி, தொமுச மாவட்டச்  செயலாளர் சண்முக ராஜ், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் கே.மணி உள்ளிட்டோர் பேசினர். இதில் விவசாயிகள், தொழிலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT