தமிழ்நாடு

நாமக்கல்: குடியரசு நாள் விழாவில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி

26th Jan 2021 11:28 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் சாலையோர வியாபாரிகள் 25 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் பி. பொன்னம்பலம் இன்று காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா சார்பில் சாலையோர வியாபாரிகள், ஏழை, எளிய மக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் நாமக்கல் வங்கிக் கிளை மேலாளர் மனோகரன் தலைமை வகித்தார். இவ்வங்கியானது இந்தியாவின் சர்வதேச வங்கியாகும். இந்திய அளவில் 9400க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளை கொண்டுள்ளது‌. அரசு சார்ந்த கடன் வழங்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் இவ்வங்கி  முனைப்புடன் திகழ்கிறது. நாமக்கல் நகர  சாலையோர வியாபாரிகள் மற்றும் மகளிர் சுய  உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும்  நிகழ்ச்சி இன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் நகராட்சி ஆணையாளர்  பு.பொன்னம்பலம் மற்றும் பரோடா வங்கியின் பிராந்திய மேலாளர் எம். ஜெய்கிஷன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் உதவியை வழங்கினர். இவ்விழாவில் பரோடா வங்கியின்  கிளை மேலாளர்கள்  ந.ரமேஷ் ,ப.கதிர்வேல் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT