தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி டிராக்டர் பேரணி

26th Jan 2021 03:55 PM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி டிராக்டர் பேரணி தொடங்கியது. 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, இந்தியாவின் தலைநகரமான தில்லி காசிப்பூர் பகுதியில் 60 நாள்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 72 ஆவது குடியரசு தினமான இன்று, தில்லியில் டிராக்டர் பேரணியை நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்து இருந்தனர். 

தில்லியில் நடத்தப்படும் டிராக்டர் பேரணிக்கு தமிழகத்திலும் விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருவாரூர் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வை.சிவபுண்ணியம் அறிவிப்பின்படி டிராக்டர் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

கூத்தாநல்லூர் நகரச் செயலாளர் எம்.சுதர்ஸன் ஏற்பாட்டின் படி, லெட்சுமாங்குடி பாலத்திலிருந்து, டிராக்டர் பேரணி  புறப்பட்டன.பேரணியை, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வை.செல்வராஜ் தொடங்கி வைத்தார். பேரணியில், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கே.தவபாண்டியன், ஒன்றிய செயலாளர் ஆர்.வீரமணி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் துரை, அருள்ராஜன், விவசாய தொழிலாளர் சங்க நகரச் செயலாளர் எம்.சிவதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி புறப்பட்ட டிராக்டர் பேரணி திருவாரூர் சென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT