தமிழ்நாடு

திருப்பூரில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்

26th Jan 2021 03:48 PM

ADVERTISEMENT

 

திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்கள் மீது அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தனர்.

இதுகுறித்து போயம்பாளையம் பிரிவு சக்திநகரைச்சேர்ந்த பொதுமக்கள் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது: 

திருப்பூர் சக்தி நகரில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய இளைஞர்கள்

திருப்பூர், சக்தி நகரில் உள்ள நியாயவிலைக்கடை முன்பாக 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திங்கள்கிழமை இரவு திரண்டனர். பின்னர் இரு சக்கர வாகனத்தில் கேக்கை வைத்து பட்டாக் கத்தியால் வெட்டியதுடன், மது அருந்தி பொதுமக்கள் அச்சுறுத்தியுள்ளனர். 

ADVERTISEMENT

இதே போல பலமுறை இளைஞர்கள் நள்ளிரவில் மது அருந்தி தகராறில் ஈடுபட்டு வருவது பொதமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT