தமிழ்நாடு

சீர்காழியில் உண்ணாவிரதப் போராட்டம்: மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் 80 பேர் கைது

26th Jan 2021 12:18 PM

ADVERTISEMENT

 

சீர்காழி: சீர்காழியில் மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் காவல்நிலையம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

சீர்காழி காவல் நிலையம் முன்பு மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் அக்கட்சியினர் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட 80 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப் பட்டனர்.

சீர்காழி காவல் நிலையம் முன்பு கள்ளர், மறவர், அகமுடையார் உள்பிரிவுகள் கொண்ட முக்குலத்தோரை தேவர் இனம் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும், மூவேந்தர் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் மீது சீர்காழி மற்றும் நாகை மாவட்ட காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் மாநில துணைத்தலைவர் விப்ர நாராயணன், பொதுச்செயலாளர் செல்வராஜ் மாவட்ட செயலாளர் முணிபாலன், நகரச் செயலாளர் குமார், நகர தலைவர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் பாரதிதாசன் பாலமுருகன் மண்டல செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் சேது ராமன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தில் பங்கேற்ற ஸ்ரீதர் வாண்டையார் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் எங்களை காவல்துறையினர் கைது செய்தாலும் உண்ணாவிரதம் சிறையில் சென்றும் தொடரும் என்றார் மேலும் திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸுக்கு இந்த பகுதியில் என்ன வேலை அமைதியான சூழலில் உள்ள இப்பகுதியில் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்க கருணாஸ் முயற்சி செய்கிறார் என்றார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஸ்ரீதர் வாண்டையாரிடம் டிஎஸ்பி யுவப்பிரியா, தாசில்தார் ஹரிதரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT