தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் இருசக்கர வாகனப் பேரணி

26th Jan 2021 04:54 PM

ADVERTISEMENT

 

புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக காஞ்சிபுரத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு காஞ்சிபுரம் கிளை சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் முன்பிருந்து தொடங்கிய பேரணி திருக்கச்சிநம்பிகள் தெரு வழியாக வந்து ரங்கசாமி குளம் பகுதியில் நிறைவு பெற்றது.

பேரணிக்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சாரங்கன், இந்திய கம்யூனிஸ்ட் விவசாயிகள் பிரிவு மாவட்டச் செயலாளர் மூர்த்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் நகர் செயலாளர் ஜெ.கமலநாதன்,பெண்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் அமைப்பாளர் டெல்லிபாய் ஆகியோர் உட்பட பலரும் பேரணியில் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

பேரணியில் கலந்து கொண்டவர்கள் தேசியக்கொடி மற்றும் கட்சிக் கொடியுடன் கலந்து கொண்டனர்.பேரணியில் விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் அதிகாரம்,மதிமுக,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்..வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணி

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT