தமிழ்நாடு

உசிலம்பட்டியில் மூத்த தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கௌரவிப்பு

26th Jan 2021 03:59 PM

ADVERTISEMENT

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு மூத்த தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று கௌரவித்தார்.

உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சி வலையபட்டி கிராமத்தில் வசிக்கும் முத்துமணி 85 மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் நேரில் இல்லத்திற்குச் சென்று குடியரசு தின நாளை முன்னிட்டு தியாகிக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். 

இதேபோல், உசிலம்பட்டி  மாரியம்மன் கோவில் தெரு, கருகட்டான்பட்டியில் வசிக்கும் தியாகி. பரமசிவம் மற்றும் தியாகி வீரம்மாள் ஆகியோர் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களது தேசப்பற்றினை போற்றும் வகையில் பொன்னாடை போற்றி கௌரவிக்கிறார். 

ADVERTISEMENT

உடன் உசிலம்பட்டி வருவாய்க் கோட்டாட்சியர் ராஜ்குமார் வட்டாட்சியர் விஜயலட்சுமி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் குமார், வருவாய் ஆய்வாளர் அய்யாவு, கிராம நிர்வாக அலுவலர் அய்யனார் ஆகியோர் சென்றனர். மேலும் வலையப்பட்டி கிராம பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஆற்றிலிருந்து ஊருக்கு வரும் ஓடைப் பகுதி சீரமைத்துச் சிறு பாலங்கள் கட்டி தரவேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனர்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT