தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72-வது குடியரசு நாள்விழா கொண்டாட்டம்

26th Jan 2021 10:01 AM

ADVERTISEMENT

 

நாட்டின் 72-வது குடியரசு நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கு திடலில்  மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, மூவர்ண பலூன்களை பறக்க விட்டார்.

தொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் 77 பயனாளிகளுக்கு 54 லட்சத்து 21 ஆயிரத்து 415 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ADVERTISEMENT

காவல்துறை, வருவாய் துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பதக்கங்கள், நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். பள்ளி மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் இல்லாமல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.  

விழாவில் காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், திட்ட அலுவலர் ஸ்ரீதர், சார் ஆட்சியர் வித்யா, பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் அனைத்துத் துறை உயர் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
 

Tags : Kanchipuram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT