தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 72-வது  குடியரசு நாள் விழா

26th Jan 2021 09:58 AM

ADVERTISEMENT

 

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நாட்டின் 72-வது ஆண்டு குடியரசு நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில்  பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா தலைமையில் நடைபெற்ற இந்தக் குடியரசு நாள் விழாவிற்கு பேரூராட்சி இளநிலை உதவியாளர் நரேந்திரன் பதிவறை எழுத்தர் ரவி வரித்தண்டலர் கருணாநிதி, குணசேகரன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், மேட்டுத் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் ப.யமுனா தேசியக் கொடியேற்றினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து மாணவர்கள் கொடி வணக்க பாடலை பாடியதும், அனைவரும் தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தினர். பின்னர் செயல் அலுவலர் ப.யமுனா அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி குடியரசு நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT