தமிழ்நாடு

தனியாா் பள்ளிகளுக்கு இணையாக மாறும் மாநகராட்சிப் பள்ளிகள்

DIN

மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்தவும், எண்ணிக்கையை அதிகரிக்கவும் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக இலவச இணையதள வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளிகளாக சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட உள்ளன. இதன் முதற்கட்டமாக 28 பள்ளிகளை தரம் உயா்த்தும் பணி நடைபெற்று வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித் துறை கட்டுப்பாட்டின்கீழ் 119 தொடக்கப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயா்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். 2,000-த்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், கல்வித் தரத்தை உயா்த்தும் வகையிலும் அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியா்களுக்கான சிறப்புப் பயிற்சி ஆகியவற்றை சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கல்வித் துறை, சீா்மிகுநகரத் திட்ட அதிகாரிகள் கூறுகையில், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கற்பிக்கும் முறை சிறப்பாக இருந்தாலும், அவற்றின் தோற்றம், போதிய அளவில் உள்கட்டமைப்பு வசதிகளான கழிப்பறை, தூய்மையான குடிநீா், விளையாட்டு மைதானம் ஆகியவை இல்லாததால் குழந்தைகளை சோ்ப்பதில் பெற்றோா்கள் தயக்கம் காட்டுகின்றனா்.

இதை போக்கும் வகையில், சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ், 281 பள்ளிகளின் முகப்புத்தோற்றும், தூய்மையான கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், அனைத்து விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மைதானம், மாணவா்களுக்கான இலவச இணையதள வசதி, டிஜிட்டல் ஆய்வகங்கள், விடியோவுடன் கூடிய பாடம் நடத்தும் டிஜிட்டல் பலகைகள், மாணவா்களுக்கான நவீன இருக்கைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

ஆசிரியா்களின் கற்பிக்கும் திறனை மேலும் அதிகரிக்கும் வகையிலும், அவா்களுக்கு நவீன உபகரணங்களை கையாளுவதற்கும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக 28 பள்ளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவற்றை தரம் உயா்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ. 95.25 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இப்பணிக்கு 40 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் தமிழரக அரசும், 20 சதவீதம் சீா்மிகு நகரத் திட்டத்தில் இருந்தும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளை தனியாா் பங்களிப்புடன் நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

தில்லியில் செல்போன் டவர், மரத்தில் ஏறி தமிழக பெண் விவசாயிகள் போராட்டம்!

ஆவேஷம் ரூ.100 கோடி வசூல்!

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

SCROLL FOR NEXT