தமிழ்நாடு

கொள்ளானூர் ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா திருக்கோவில் சம்ப்ரோக்ஷணம்

DIN


கும்மிடிப்பூண்டி அடுத்த கொள்ளானூரில் உள்ள பிரசித்தி பெற்ற புராதனமான கோவிலான ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் புனரமைக்கப்பட்டு அதன் மஹா சம்ப்ரோஷணம் திங்களன்று கோலாகலமாக நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த கொள்ளானூரில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ருக்மிணி பாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் புனரமைக்கப்பட்டு நூதன விமானம் நிர்மாணிக்கப்பட்டு, ஸ்ரீ ருக்மிணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமிகள், ஸ்ரீ கனகவல்லி தாயார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீ தும்பிகையாழ்வார், நவக்கிரக தேவதைகள், பரிவார தேவதைகளுக்கும் சம்ப்ரோஷணம் கோலாகலமாக நடைபெற்றது.

சம்ப்ரோஷணத்தை ஒட்டி சனிக்கிழமை அனுக்ஞை, வாஸ்து ஹோமம், கும்பகலச ஸ்தாபனம், மஹாசங்கல்பம்,  மேதிநீ பூஜை, அங்குரார்ப்பணம், கும்பாவாஹனம், முதல்கால ஹோமம், பிம்பஸ்தானம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

ஞாயிறன்று புண்யாஹம், கும்பாராதனம், அஷ்டபந்தன சமர்ப்பனம், 2ஆம் கால ஹோமம், பஞ்சகவ்யாதிவாஸம், ஜலாதிவாவாஸம், நவகலச திருமஞ்சனம், மஹாசாந்தி திருமஞ்சனம்,விசேஷ ஹோமம் உள்ளிட்ட சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.

கும்பாபிஷேக தினமான திங்களன்று கோதர்சனம், புண்யாஹம், கும்ப புறப்பாடு, யாத்ராதானம் நடைபெற்றது.தொடர்ந்து தீர்த்த புனிதநீர் அடங்கிய கலசங்கள் வேத மந்திரம் முழங்க ஆலய கோபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு ஆலய கோபுரத்தில் தீர்த்த புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக தினமான திங்களன்று கோதர்சனம், புண்யாஹம், கும்ப புறப்பாடு, யாத்ராதானம் நடைபெற்றது. தொடர்ந்து தீர்த்த புனிதநீர் அடங்கிய கலசங்கள் வேத மந்திரம் முழங்க ஆலய கோபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு ஆலய கோபுரத்தில் தீர்த்த புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், தீர்த்த நீர் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு அலங்காரத்திலிருந்த ருக்மிணி ராதா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமிகளை கண்டு பக்தர்கள் அருள் பெற்றனர்.

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், தீர்த்த நீர் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு அலங்காரத்திலிருந்த ருக்மிணி ராதா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமிகளை கண்டு பக்தர்கள் அருள் பெற்றனர்.

இந்த கும்பாபிஷேகத்தில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், அதிமுக நிர்வாகிகள் மு.க.சேகர், தன்ராஜ், கருணாகரன்,ஓடை.ராஜேந்திரன், எம்.எஸ்.எஸ்.சரவணன் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், நாகராஜ், தேர்வாய் ஊராட்சி தலைவர் முனிவேல் மற்றும் சுமார் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

சம்ப்ரோஷணத்திற்கான ஏற்பாடுகளை அதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கோவி.நாராயணமூர்த்தி, கொள்ளானூர் ஊராட்சி தலைவர் துர்காதேவி வெங்கடேசன், துணைத் தலைவர் நதியா மணிகண்டன், கொள்ளானூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெயவேல் , தயாநிதி, சீனிவாசன், பாலாஜி, கோபி உள்ளிட்ட கோவில் திருப்பணி குழுவினர், பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 6 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT