தமிழ்நாடு

கம்பம் மெயின் ரோட்டு கடையில் தேநீர் அருந்திய துணை முதல்வர்

25th Jan 2021 03:04 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் கம்பத்தில் திங்கள்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதான சாலையில் உள்ள தேநீர்க் கடையில் தேநீர் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் திருமண விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் திங்கள்கிழமை தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். கம்பம் பிரதான சாலைக்கு சிக்னல் அருகே தேநீர்க் கடை உள்ளது. திடீரென்று காரை நிறுத்தச் சொன்ன துணை முதல்வர் காரை விட்டு கீழே இறங்கி கடைக்குள் சென்றார். அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான தேநீர்க்கடையில் துணை முதல்வர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேநீர்க்கடை உரிமையாளர் முபாரக் துணை முதல்வரை வரவேற்றார். வியாபாரம் எப்படி உள்ளது என்று விசாரித்த துணை முதல்வர், மிச்சர், தேநீர் கொண்டுவரச் சொல்லிச் சாப்பிட்டார். சுமார் 10 நிமிடங்கள் கடையில் அமர்ந்து, மற்றவர்களையும் அருந்த செய்தார். பின்னர் சாப்பிட்ட தேநீருக்கு பணம் கொடுத்தார் கடை உரிமையாளர் வேண்டாம் என்றார். அதை மறுத்து அவர் பணம் கொடுத்து விட்டுச் சென்றார். 

ADVERTISEMENT

துணை முதல்வர் கம்பம் பிரதான சாலையில் தேநீர் சாப்பிட்டுச் சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT