தமிழ்நாடு

சசிகலாவுக்கு கரோனா தொற்று குறைந்துள்ளது: மருத்துவமனை நிர்வாகம்

DIN

சசிகலாவுக்கு கரோனா தொற்று குறைந்துள்ளது என்று பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்று பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் உள்ள வி.கே.சசிகலாவுக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பௌரிங் அரசு மருத்துவமனை, பின்னா் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். 
சசிகலாவுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஜன. 21-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவுக்கு கரோனா தொற்று குறைந்துள்ளது என்று பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலாவுக்கு கரோனா தொற்று குறைந்து வருகிறது. சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால் அவருக்கு இன்சுலின் அளிக்கப்பட்டு வருகிறது. 
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. உணவை உட்கொண்டு வருகிறாா். இயல்பாக அமருகிறாா். கைத் துணையுடன் நடைபயின்று வருகிறாா். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சசிகலாவின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருவதால் விரைவிலேயே அவர் சாதாரண வார்ட்டுக்கு மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT